Sunday, October 2, 2011

வருந்தாதீர் காந்தியாரே!




கரம்சந்த் காந்தியாரே வருந்தாதீர்!
மரம்போல்# வாழ்கிறோம் வருந்தாதீர்!
மனம்போல் வாழ்கிறோம் வருந்தாதீர்!
இன‌ம்-இன‌மாய் பிரிந்து வாழ்கிறோம் வருந்தாதீர்!

எங்களை நாங்களே ஆள்கிறோம் வருந்தாதீர்!
ஆங்கிலேயருக்குமட்டும் அடிமை இல்லை நாங்கள் வருந்தாதீர்!
தங்கமணிந்த பெண் இரவில் தனியே செல்கிறாள் வருந்தாதீர்!
தங்கம்மட்டும் மாற்று குறையாது திரும்பிவிடும் வருந்தாதீர்!

எங்களை நாங்களே சுரண்டுகிறோம் வருந்தாதீர்!
சுஙகம்முதல் சுரங்கம்வரை ஊழல் உண்டு வருந்தாதீர்!
துங்கபத்தரையிலும் கனிமக்கொள்ளை உண்டு வருந்தாதீர்!
சிங்கூரில் சிலநில ஊழல் உண்டு வருந்தாதீர்!

அடக்குமுறையும் நாங்களே செய்கிறோம் வருந்தாதீர்!
அடக்குமுறையில் நாங்களே சாகிறோம் வருந்தாதீர்!
நடக்குமென பொய்பிணைகள் நாங்களே செய்கிறோம் வருந்தாதீர்!
கடக்கும்போது வாய்மூடி நாங்களே சாகிறோம் வருந்தாதீர்!

இந்தியாவின் தந்தையென்று நாங்களே சொன்னோம் வருந்தாதீர்!
இந்துஇன தலைவனென்று நாளை சொல்வோம் வருந்தாதீர்!
இந்தசாதி நீரென்று பிரித்து பின்னர் சொல்வோம் வருந்தாதீர்!
இந்தியனே நீரில்லை என்றொருநாள் சொல்வோம் வருந்தாதீர்!



என‌வே இப்போதே ந‌ன்றி சொல்கிறேன்
க‌ன‌வே மீண்டும் ந‌ன்றி சொல்லும்வாய்ப்பு



#  ம‌ர‌ம்போல்வ‌ர் ம‌க்க‌ட்ப‌ண்பு இல்லாத‌வ‌ர் - வ‌ள்ளுவ‌ர்

Monday, September 26, 2011

ஏன் ம‌ற‌ந்தாய் இறைவா ?



உண‌வு த‌ந்தாய் உயிர்வ‌ள‌ர்க்க‌
தின‌வு த‌ந்தாய் உட‌ல்வ‌ள‌ர்க்க‌ - ந‌ல்ல‌
க‌ன‌வுத்தூக்க‌ம் த‌ந்தாய் சோர்வ‌க‌ற்ற‌, மாறா
மனஉறுதி த‌ந்தாய் ஒழுக்க‌ம்வ‌ள‌ர்க்க ஆயினும்
பிண‌க்கு கொண்டுபிரிந்த‌வ‌ர், மீண்டும் காண‌விரும்பா
க‌ண‌க்கு கொண்டுபிரிந்த‌வ‌ர், துரோக‌ம் விரும்பிய‌வ‌ர்
நினைவ‌கற்றும் ச‌க்தி த‌ர‌ ஏன் ம‌ற‌ந்தாய் இறைவா