உணவு தந்தாய் உயிர்வளர்க்க
தினவு தந்தாய் உடல்வளர்க்க - நல்ல
கனவுத்தூக்கம் தந்தாய் சோர்வகற்ற, மாறா
மனஉறுதி தந்தாய் ஒழுக்கம்வளர்க்க ஆயினும்
பிணக்கு கொண்டுபிரிந்தவர், மீண்டும் காணவிரும்பா
கணக்கு கொண்டுபிரிந்தவர், துரோகம் விரும்பியவர்
நினைவகற்றும் சக்தி தர ஏன் மறந்தாய் இறைவா